2. வேட்டுவ வரி

மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரு மெனவாங்கு



18
உரை
19

       மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் கட்டு உண் மாக்கள் கடந்தரும் என ஆங்கு - வழிப்போவார் வளனைப் பறித்து உண்ணும் மறவர்காள் நீவிர் கள்ளுண்டு களிக்கும் வாழ்க்கையினை விரும்புவீராயின் கொற்றவைக்கு நேர்ந்த கடனைத் தம்மின் என்று சொல்ல ;

       கட்டல் - பறித்தல். மாக்கள் - விளி. தாருமென்பது தருமெனக் குறுகிற்று. ஆங்கு - அசை. இனி, எயினர் குடிப் பெண் ஒருத்தியைக் கொற்றவை கோலங் கொள்வித்தல் கூறுகின்றார்.