இட்டுத்
தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத் தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் கருதிய
பகைஞர் தலையைத் தாம் அறுத்திட்டு எண்ணுவதல்லது பகைவர் கருதுவது முடிவு போகாமைக்குக்
காரணமாகிய மறவரது பழைய குடிக்கண் பிறந்த குமரியை ;
தம் வன்மையாற் பிறரை அழித்தற்
குரியரே யன்றிப் பிறர் தம்மை அழித்தற் குரியர் அல்லர் என்பதாம். சுட்டு - கருத்து.
இனி, தலைகள் அரிந்து வைக்கப் பிறரால் எண்ணப்படுமதல்லது நோயாற் செத்துச் சுடப்பட்டுப்
போகாத குடி எனலுமாம்.
|