சிறுவெள்
அரவின் குருளை நாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி - சிறிய வெள்ளிய பாம்பின்
குட்டியாகப் பண்ணிய பொன் நாணால் குறுகிய நெளிந்த கூந்தலை நீண்ட சடையாகச் சுற்றிக்
கட்டி, இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து - கட்டு வேலி சூழ்ந்த தோட்டப் பயிரை அழித்த
பன்றியின், வளை வெண் கோடு பறித்து - வளைந்த வெள்ளிய கொம்பினைப் பிடுங்கி,
மற்று அது முனை வெண்டிங்கள் என்னச் சாத்தி - அதனை இளைய வெள்ளிய பிறை என்னும்படி
சாத்தி ;
குமரியைக் கூந்தலைக் கட்டி என்றது, 1"முதன்முன்
ஐவரிற் கண்ணென் வேற்றுமை, சினைமுன் வருத றெள்ளி தென்ப" என்னுஞ் சூத்திரத்துத் 'தெள்ளிது'
என்பதனாற் கொள்க. 'அரவின் குருளை' என்றதனை, 2"நாயே
பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை என்ப" என்னும் சூத்திரத்து 'ஆயுங்காலை'
என்பதனாற் கொள்க. சுற்றிக் கட்டி யென்க. இனி, கூந்தலைச் சடையாகக் கட்டி நாணினைக்
குருளையாகச் சுற்றி என்னலுமாம். படப்பை ஆகுபெயர். இனி, படப்பை இழுக்கிய ஏனம் என்பதற்குப்
படப்பைக்கண் பட்ட ஏனம் என்றுமாம்.
|