மறங்
கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற - தறு கண்மையை உடைய வலிய புலியினை வாயைப்
பிளந்து கொண்ட, மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி - ஒழுங்காகக் கோத்த வெள்ளிய
பல்லினாலாகிய தாலியை வரிசைப்படக் கட்டி, வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ - கோடுகளும் புள்ளிகளும் கலக்கப் பெற்ற தூய புறத்தினையுடைய தோலினை
மேகலையாக உடுத்து ;
பல்லொழுங்கை நிரைத் தாலியாகப்
பூட்டி யெனலுமாம். உரிவை - உரி.
|