மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
1
உரை
1
நபெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு - முன்னர்க் கூறிய வேட்டுக் குமரி யணிந்த கொற்றவை கோலம் நீங்கிய பின்னர் ; பிற்பாடு - ஒரு சொல். கோலம் நீங்கியதெனவே கூத்து நீங்கியதும் பெற்றாம்.