|
|
வரிநவில்
கொள்கை மறைநூல் வழுக்கத்துப
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
|
|
வரி நவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து
- வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய,
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து - முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும்
பதியைச் சேர்ந்து ;
வரி
- ஈண்டுக் காமங் கண்ணிய இசைப் பாட்டு. மறைநூல் - வேத வொழுக்கம். புரிநூல் மார்பர்
என்றது அவர் பிறப்பினாற் பார்ப்பன ரென்பதை அறிவியாநிற்பது அஃதொன்றுமே யென்ற படி.
[அடி.
புக்கென்னாது சேர்ந்தென்றதனால், அந்தப் பார்ப்பார் இழுக்கிய வொழுக்க முடைமை தமது
சாவக நோன்புக் கேலாமையின், ஊர்க்கயலதோர் நகரிற் கோயிற்பக்கத்திற் சேர்ந்தா
ரென்க.]. |
|