|
40
|
மாதவத் தாட்டியொடு
காதலி தன்னையோர
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி யாங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
|
|
மாதவத்தாட்டியொடு
காதலி தன்னை ஓர் தீது தீர்சிறப்பின் சிறை அகத்து இருத்தி-கவுந்தியடிகளுடனே கண்ணகியையும்
குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய ஓர் அடைப்புள்ள இடத்தே இருக்கச் செய்து, இடு முள்வேலி
நீங்கி - முள்ளிட்டுக் கட்டப்பெற்ற வேலியைக் கடந்து, ஆங்கு ஓர் நெடுநெறிமருங்கின்
நீர் தலைப்படுவோன் - அவ்விடத்து நீண்ட வழிக்கண் உள்ளதோர் நீர்நிலைக்கண் சார்ந்தவன்
;
சிறையகம் - சுற்றும் வேலியிட்ட காவலான இடம். நெடு
நெறி - பெருவழி. நீர்தலைப்படுதல் - சந்தி பண்ணுதல் என்பர் அரும்பத உரையாசிரியர் |
|