3. புறஞ்சேரியிறுத்த காதை


45
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்


44
உரை
47

     காதலி தன்னொடு கானகம் போந்ததற்கு-தன்காதலி யோடு காட்டின்கண் போந்த அதனுக்கு, ஊது உலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவம் திரிய - கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலப் பெருமூச்சு எறிந்து உள்ளம் கலங்கித் தனிமையுற்று நிறம் வேறுபடலான், கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் - கௌசிகன் தன் கண்பார்வையின் மயக்கத்தால் தெளியானாய் ;

     
போந்ததற்கு - போந்தமை நிமித்தமாக. உள் கலங்கியென மாறுக. உருவம் திரிந்தமைக்குக் காதலியொடு கானகம் போந்தமையும் உள்ளங் கலங்கியமையும் காரணங்களாம். உலைக் குருகு - வெளிப்படை. உயிர்த்தனன் - முற்றெச்சம். கௌசிகன் - பெயர்; குடிப்பெயருமாம்.

     
தெளிதற்பொருட்டுக் கூறுகின்றான் :-- .