|
50
|
கோவலன்
பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாணி கூறக் கேட்டே
|
|
கோவலன்
பிரியக் கொடுந்துயர் எய்திய - கோவலன் தன்னை விட்டுப் பிரிதலானே மிக்க துன்பத்தினை
அடைந்த, மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - கரிய நெய்தல் மலர் போலும் நெடிய கண்களையுடைய
மாதவியைப் போல, இவ்வருந்திறல் வேனிற்கு அலர் களைந்து - இப் பொறுத்தற்கரிய வெம்மையினையுடைய
வேனிற் காலத்து வெயிலால் அலரைப் பொறாது, உடனே-அப்பொழுதே, வருந்தினை போலும் மாதவி-
மாதவியே நீ துன்பமுற்றனையோ, என்று ஓர் பாசிலைக்குருகின் பந்தரில் பொருந்தி - என
ஓர் பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த நிழலினையுடைய இடத்தில் சேர்ந்து, கோசிக
மாணி கூறக் கேட்டே - பிரமச்சாரியாகிய கௌசிகனென்ற மறையவன் சொல்லக் கோவலன்
கேட்டு ;
அலர்
களைதலை முன்னர் மாதவிக்குங் கூட்டுக. அலர்களைதல் - பழிச்சொல் பொறாமை, மலர்களை
நீக்குதல். பந்தர் - நிழல். வேனிற்கு - வேனிலான்; உருபுமயக்கம். பந்தரில் பொருந்தி
வருந்தினை போலும் என்று கூறக் கேட்டு என்க. |
|