|
55
|
யாதுநீ கூறிய
உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்
|
|
யாது
நீ கூறிய உரை ஈது இங்கு என - நீ இவ்விடத்துக் கூறிய இவ் வுரையின் பொருள் யாது என்று
கேட்ப, தீது இலன் கண்டேன் எனச் சென்று எய்தி - கோவலன் தீங்கின்றியுளன் அவனை யறிந்தேன்
எனக் கருதி அவனைச் சென்று அடைந்து
ஈது உரை என்க. தீது இலன் - ஐயமுடையேன் அல்லேன்
என்பாருமுளர். |
|