3. புறஞ்சேரியிறுத்த காதை

இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்


57
உரை
58

     இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் - பெருஞ் செல்வத்திற் குரியோனாகிய மாசாத்துவானும் அவன்றன் இல் லக்கிழத்தியும், அருமணி இழந்த நாகம் போன்றதும் - பெறற் கரிய மணியை இழந்த நாகம்போல் ஒடுங்கியதும் ;

பெருஞ் செல்வமுடையனாகலின் இருநிதிக் கிழவன் என்றார். மணி இழந்த நாகம் வருந்துமென்பதனை, ''1அருமணி இழந்தோர் நாக மலமரு கின்ற தொத்தாள்'' என்பதனானறிக.


1. சீவக. 1508.