|
60
|
இன்னுயி ரிழந்த
யாக்கை யென்னத்
துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும்
|
|
இன்
உயிர் இழந்த யாக்கை என்ன - இனிய உயிரினை இழந்த உடம்புபோல, துன்னிய சுற்றம் துயர்க்கடல்
வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தார் துன்பக்கடலில் ஆழ்ந்ததும்;
உயிரிழந்த யாக்கை செயலறுதலோடு ஒருகாலைக் கொருகால்
அழகழியுமாறுபோல இச் சுற்றமும் செயலறுதலோடு துன்பமீக் கூர்தலின் தம் உடல் இயல்பு அழியப்பெற்றனர்
என்க. "1இன்னுயிரிழந்த யாக்கையி னிருந்தனள்"
என்பதுங் காண்க.
1.
மணிமே. 7 . 133.
|
|