3. புறஞ்சேரியிறுத்த காதை


ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்



61
உரை
62

     ஏவலாளர் யாங்கணும் சென்று - பணியாளர் எத் திசைக்கண்ணும் சென்று, கோவலன் தேடிக்கொணர்கெனப் பெயர்ந்ததும் - கோவலனைத் தேடிக் கொண்டு வருவீராக என்று மாசாத்துவான் கூற அவர்கள் சென்றதும் ;

     ஏவலாளர் - விளி. 1"மெல்லெழுத்து மிகுவழி" என்ற சூத்திரத்து 'அன்ன பிறவும்' என்பதனால், கோவலற் றேடி என உயர் திணைப்பெயர் இரண்டாம் வேற்றுமைக்கண் திரிந்து முடிந்தது. "கொணர்கெனப் போந்ததும்" என்பதும் பாடம்.



1. தொல். எழுத்து. 157.