3. புறஞ்சேரியிறுத்த காதை

  கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்


3
உரை
4

     கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்-இவ் வழக்கினையுடைய கண்ணகி கடிய ஞாயிற்றின் வெம்மையைப் பொறுக்கலாற்றாள், படிந்தில சீறடி பரல் வெங் கானத்து - பருக்கைக் கற்களையுடைய கொடிய காட்டு வழியில் இவள் சிறிய அடிகளும் படிந்தில ;

     சீறடி படிந்தில என்றது கால் கொப்புளங் கோடலின். அடி நன்கு மிதித்து நடவாமை கூறியவாறு. 'பரல்வெங் கானம்' என்பதனைப் பின் வரும் அடிகளொடும் கூட்டுக.