|
65
|
பெருமகன்
ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
|
|
பெருமகன்
ஏவல் - தலைவன் ஏவிய பணிவிடையைச் செய்தலே உயர்ந்த பொருளாகும், அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று - யாண்டும் அங்ஙனமன்றாகிய அரசாட்சியும் எண்மைப் பொருட்டாம்
என்று கருதி, அருங் கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல - கடத்தற்கரிய
காட்டினை அடைந்த இராமன் பிரியலுற்ற அயோத்தியைப் போல, பெரும் பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும்
- பெரிய புகழினையுடைய பழமையாகிய காவிரிப்பூம்பட்டினத்துள்ளார் மிகவும் அறிவு மயங்கியதும்
;
பெருமகன் - தயரதன். தஞ்சம் - எண்மை. அருந்திறல்
- அரிய திறலுடைய இராமன் ; ஆகுபெயர். பேதுறவு - அறிவின் றிரிவு.
|
|