3. புறஞ்சேரியிறுத்த காதை





70
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்


67
உரை
70

     வசந்தமாலைவாய் மாதவி கேட்டு - தன் திருமுகத்தை மறுத்துக் கூறியதனை மாதவி வசந்தமாலையினிடத்துக் கேள்வி யுற்று, பசந்த மேனியள் படர்நோய் உற்று - பசப்புற்ற மேனியை உடையளாய் நினைவென்னும் பிணியுற்று, நெடுநிலை மாடத்து இடைநிலத்து - உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடத்தில், ஆங்கு ஒர் படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் - ஓர் பள்ளியறையில் உறங்கற்கமைந்த சேக்கைக்கண் வீழ்ந்த செய்தியும் ;

     வசந்த மாலைவாய் மாதவி கேட்டு' என்பதற்குக் கோவலன் கண்ணகியுடன் சென்றதனை மாதவி கேட்டு என உரைப்பர் அரும்பத வுரையாசிரியர். மேனியள், முற்றெச்சம். படை - உறக்கம் ; படுத்தலுமாம். ஆங்கு, அசை. சேக்கைப் பள்ளி - சேக்கையிடம் எனவும் ஆம்.