3. புறஞ்சேரியிறுத்த காதை




75
தாழ்துய ரெய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்


73
உரை
76

      இருந்துயர் உற்றோள் - மிக்க துன்பமுற்றவளாகிய மாதவி, இணை அடி தொழுதேன் வருந்த துயர் நீக்கு என - நினது இரண்டு அடிகளையும் வணங்கினேன் எனக்கு வந்த துன்பத்தினைப் போக்குவாய் என்று சொல்லி, மலர்க்கையின் எழுதி - மலர்போன்ற தன் கைகளால் எழுதி, கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே - என் கண்ணின் கருமணிபோல்வானுக்குக் காட்டுக என்று சொல்லி, மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - இலாஞ்சனை யையுடைய திருமுகத்தை அவள் தந்ததும் ;

'     
இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென' என்றது, கொண்டு கூறல். திருமுகம் எழுதிச் சுருட்டி அதன்மீது மண் இலாஞ்சனை இடுதல் மரபாகலான் 'மண்ணுடை முடங்கல்' என்றார். உற்றோள் மாதவி எழுதி ஈத்ததும் என்க.
.