3. புறஞ்சேரியிறுத்த காதை


80
வழிமருங் கிருந்து மாசற வுரைத்தாங்
கழிவுடை யுள்ளத் தாரஞ ராட்டி
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட


79
உரை
82

      வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து - நெறியின் பக்கத்தே தங்கிக் குற்றமறச் சொல்லி, ஆங்கு அழிவு உடை உள்ளத்து ஆர் அஞராட்டி - அவ்விடத்து அழிந்த உள்ளத்தையும் மிக்க காம நோயையும் உடையளாகிய, போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - மலர் விரிந்த புரிந்த கூந்தலையுடைய பூங்கொடி போன்ற நங்கையாகிய மாதவி தந்த ஓலையைக் கோவலன் கையிலே கொடுக்க ;

     
மாசு அற உரைத்து என்றது நிகழ்ந்த நிகழ்ச்சியினை உள்ளவாறே உரைத்து என்றவாறு. ஆர் அஞராட்டியாகிய மாதவி என்க.
.