|
|
உடனுறை காலத்
துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்
ஏட்டகம் விரித்தாங் கெய்திய துணர்வோன்
|
|
உடன் உறை காலத்து உரைத்த நெய்
வாசம் - தான் அவளொடு கூடி உறைந்த காலத்தில் பூசிய புழுகு நெய்யின் மணத்தினை, குறுநெறிக்
கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது ஆகலின் - செறிந்த நெறிப்பையுடைய கூந்தலாலிட்ட
மண் இலச்சினை அறிவித்துக் காட்டியது ஆதலால், கைவிடலீயான் - அம் முடங்கலைக் கையினின்றும்
விடுவிக்க எண்ணாதவனாய், ஏட்டு அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர் வோன் - பின்னர்
ஏட்டினை விரித்து அவ்வோலைக்கண் அடங்கிய பொருளை அறிகின்றவன் ;
கூந்தல்
மண் பொறி - மண்ணின்மீது கூந்தலா லொற்றிய பொறி. வாசனையின் செவ்வி இன்மையைப்
பொறி காட்டிற்று எனலுமாம். கைவிடலீயான் - மண் பொறியைக் கடிதின் விடுவியானாய்ப்
பின்னர் விடுவித்து எனலுமாம்; வினைத்திரிசொல்.
. |
|