3. புறஞ்சேரியிறுத்த காதை


90

குரவர்பணி யன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சங் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி


89
உரை
92

      குரவர் பணி அன்றியும் - இருமுது குரவர்க்கும் பணி செய்தல் ஒழிந்ததன்றியும், குலப்பிறப்பாட்டியோடு இர விடைக் கழிதற்கு - உயர்குடிப் பிறந்த கண்ணகியோடு இர வின்கண் நீர் செல்வதற்கு, என் பிழைப்பு அறியாது கையறும் நெஞ்சம் - யான் செய்த குற்றம் யாதென்று உணராது என் உள்ளம் செயலறுகின்றது, கடியல் வேண்டும் - அதனைப் போக்கல் வேண்டும், பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி- குற்றம் நீங்கிய அறிவினையுடைய மேலோய் போற்றுக ;

     
என் பிழைப்பு அறியாது என்றது யான் பிழையொன்றும் செய்திலேன், செய்தேனாயினும் அதன் பொருட்டு நீர் நும் இருமுது குரவரையும் பேணுதலை ஒழிந்து கற்புடை மனைவியோடு இரவின் கண் வேற்று நாட்டிற்குச் சேறல் தகுதியன்று என்று கூறிய வாறாயிற்று. போற்றி என்றது குரவர்பணி பிழைத்தலானும், கற் புடையாளொடு இரவிடை வேற்று நாட்டிற்குச் சேறலானும், யான் இறந்துபடுதலானும் நின்புகழ்க்குக் குறையுண்டாகாமற் காக்க என்றபடி.