3. புறஞ்சேரியிறுத்த காதை




95

என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்றீ தென்றே எய்திய துணர்ந்தாங்


93
உரை
95

      என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து - இவ்வாறு அவள் எழுதிய வாசகத்தின் பொருளை அறிந்து, தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே - தன்னாற் செய்யப்பட்ட குற்றமுடையவ ளல்லள் அவள், என் குற்றமே யாம் என்று தெளிந்து சோர்வு நீங்கி ;

     
என் தீது - எனது தீவினை. தளர்ச்சி நீங்கினான் பொய் தீர் காட்சியோ னாகலான் ஊழ்வினையின்படி யாவும் நடக்குமென் றுணர்ந்து.