|
|
கெற்பயந்
தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது |
|
எய்தியது
உணர்ந்து ஆங்கு - அவ் வோலையிற் பொருந்திய வாசகத்தை அறிந்து, எற் பயந்தோற்கு இம்
மண் ணுடை முடங்கல் பொற்பு உடைத்தாகப் பொருள் உரை பொருந்தியது - என்னை ஈன்ற தந்தைக்கும்
இந்த இலச் சினையையுடைய ஓலை தானே பொலிவுடைத்தாம்படி பொருளும் உரையும் பொருந்தின
;
என்னை
பொருந்தியவாறெனின்? குரவீர் நும் திருவடியை வணங்கினேன், தெளிவில்லாத என் புன்சொற்களை
ஏற்றருள வேண்டும் ; நுமக்குச் செய்யும் பணிவிடையை ஒழித்ததன்றி, இக் கற்புடையாளொடு
நும்மை விட்டு நீங்கி இரவின்கண் கழிதல் காரணமாக உண்டாய என் பிழையினை உணராது, அப்
பிரிவான் ஏற்படும் நும் உள்ளத் தளர்ச்சியினைப் போக்குதல் வேண்டும்; குற்றம் தீர்ந்த
அறிவினையுடைய பெரியோய் போற்றி ;' எனப் பொருந்தியவா றுணர்க. பெரியோர்க்குக்
காப்புக் குறித்துப் போற்றி யென்றல் மரபாகலின் புரையோய் போற்றி' என்றான். எய்தியதுரைத்து
என்று பாடங்கொண்டு தான் போந்த காரணம் சொல்லி என்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். |
|