3. புறஞ்சேரியிறுத்த காதை

 

ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி


108
உரை
108

      ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி-செங்கோட்டி யாழ் ஒற்று, பற்று என்னும் உறுப்புக்களையுடைத் தாகலான் ஒற்றினைப் பற்றிடத்திற் சேர்த்தி ;

      செங்கோட்டி யாழின் உறுப்புக்கள் ஆறு ; இதனை, "செங்கோட்டி யாழே செவ்விதிற் றெரியின், அறுவகை யுறுப்பிற் றாகுமென்ப" "அவைதாம், கோடே திவவே யொற்றே.......,தந்திரிகரமே நரம்போ டாறே" என்பவற்றானறிக. ஒற்றுறுப்பு - நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி யென்பர். செங்கோட்டி யாழின் பண் மொழி நரம்பு நான்கொழிய ஏனை மூன்றும் தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின், அவையே ஒற்றும், பற்றும் எனலாயின ; ஒற்றொன்றே கொள்ளலுமாம்..