3. புறஞ்சேரியிறுத்த காதை

 

உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி


109
உரை
109

      உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை குரலாகவும் கைக்கிளை தாரமாகவும் நரம்புகளை நிறுத்தி ;

      எழுவகைப் பாலையுள் அரும்பாலை என்னும் இசையைப் பிறப்பித் தென்றவாறு. உழை குரலாயது அரும்பாலை யென்பதனை ஆய்ச்சியர், குரவையுள் "குடமுத லிடமுறை...வேண்டிய பெயரே" என்பதன் உரையாலறிக. இது குடமுதற் பாலைத் திரிவு.