3. புறஞ்சேரியிறுத்த காதை

பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து


11
உரை
14

     பகல் ஒளி தன்னினும் - ஞாயிற்றின் விளக்கத்தினும், பல் உயிர் ஓம்பும் நில வொளி விளக்கின் - பல உயிர்களையும் காக்கின்ற திங்களின் ஒளியாகிய விளக்கொடு. நீள் இடை மருங்கின் இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் என - இரவின் கண் நீண்ட நெறிக்கண்ணே செல்வதற்கு உண்டாம் குற்றம் ஒன்றுமில்லை யென்று கோவலன் கூற, குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து - கவுந்தியடிகளும் அதற்கு உடன் பட்டமையால் அக் கோட்பாட்டோடே மேவி ;

     வழிச் சேறற்கு ஒளி வேண்டுதலானும், பகலொளி வருத்துதலானும் அதனிற் செல்லாது நிலவொளியிற் செல்கை நன்றென்றான். ஏதமின்மை மேலே கூறப்பட்டது.