3. புறஞ்சேரியிறுத்த காதை

115

காழகிற் சாந்தங் கமழ்பூங் குங்குமம்
நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்


115
உரை
118

     காழ் அகில் சாந்தம் கமழ் பூங் குங்குமம் நாவிக் குழம்பு - வயிரம் பற்றிய அகிலின் சாந்தும் மணங் கமழும் குங்குமப் பூங் குழம்பும் புழுகுக் குழம்பும், நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் - மணமாகிய நன்மை அமைந்த சந்தனச் சாந்தும் கத்தூரிச் சாந்துமாகிய, மணம் கமழ் தெய்வத் தேம்மென் கொழுஞ் சேறு ஆடி - இத் தெய்வ மணம் வீசும் இனிய மெல்லிய வளவிய சேற்றை யளைந்து ;
     
குழம்பு என்பதனைக் குங்குமத்தோடுங் கூட்டுக. நாவி - புழுகு. தேம் - இனிமை.
;