3. புறஞ்சேரியிறுத்த காதை


120

தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி


118
உரை
121

     ஆங்குத் தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு - பூம் பொடி பொருந்திய கழுநீர் மலரும் சண்பக மலரும் என்னும் இவற்றானாய மாலையொடு, மாதவி மல்லிகை மனை வளர் முல்லைப் போது விரிதொடையல் பூ அணை பொருந்தி - குருக்கத்தியும் மல்லிகையும் மனைக்கண் வளர்க்கப் பெற்ற முல்லையுமென்ற இவற்றின் விரிந்த மலர்களால் தொடுத்த மாலையையும் உடைய மலர் அணைக்கண் பொருந்தி ;

     
ஆங்கு - ஆசை ; அப்பொழுது என்றலுமாம். பூ அணை - பொலிவினையுடைய அணை யென்றுமாம். முல்லை மனையில் வளர்வதனை 1"இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கி" என்பதனாலும் அறிக.

1. பெருங், 1, 33 : 73.