3. புறஞ்சேரியிறுத்த காதை




125

அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்


122
உரை
126

     அட்டில் புகையும் - அடுக்களைகளில் தோன்றும் தாளிப்பு முதலிய புகையும், அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் - அகன்ற கடைவீதிக்கண் தம் வாணிபம் முட்டுப் பெறாத அப்ப வாணிகர் அப்பம் சுடுகின்றமையான் உண்டாகும் புகையும், மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த அந்தீம் புகையும் - ஆடவரும் மகளிரும் மேல் மாடத்து உண்டாக்கிய அழகிய இனிய அகிற் புகையும், ஆகுதிப் புகையும் - வேள்விச் சாலைகளில் ஓமம் பண்ணுதலால் எழும் புகையும் ஆகிய, பல்வேறு பூம் புகை அளைஇ - பலவாக வேறுபட்ட பொலிவினையுடைய புகையை அளாவி ;

     
அங்காடி - கடைவீதி. கூவியர் - அப்ப வாணிகர். முட்டா மோதகம் என இயைத்து முட்டாமற் சுடுகின்ற மோதகம் எனலு மாம். மைந்தரும் மகளிரும் புகை எடுத்தல் மயிர், துகில், மாலை முதலியவற்றிற்கு மணமூட்டற்கென்க. ;