|
|
பல்வேறு பூம்புகை
அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்குங்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
|
|
வெல்போர்
விளங்கு பூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் - வென்றி காணும் போரினையும் கலன் விளங்கும்
மார்பினையும் உடைய பாண்டியனது கோயிலின்கண் தோன்றும், அளந்து உணர்வு அறியா - அறிவான்
அளவிட்டறிய வொண்ணாத, ஆர் உயிர் பிணிக்கும் - அரிய உள்ளத்தைத் தகைக்கும், கலவைக்
கூட்டம் காண்வரத் தோன்றி - நறுமணக் கலவையின் தொகுதி வெளிப்படத் தோன்றி ;
விளங்கு பூண் - இந்திரனாற் பூட்டப்பட்ட ஆரமுமாம்.
கோயிலிற் கலவை, அறியாக் கலவை, பிணிக்கும் கலவை என்க. தம்மை ஒருகால் நுகர்ந்த
உள்ளம் பின்னர் வேறொன்றினை நுகர விரும்பாது தம்மையே விரும்பி நிற்குமாறு செய்யும்
கலவைக் கூட்டம் என்பார் ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் என்றார். |
|