|
|
புலவர் செந்நாப்
பொருந்திய நிவப்பின்
பொதியிற் றென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர் |
|
புலவர்
செந்நாப் பொருந்திய நிவப்பின் - புலவர்களது செவ்விய நாவால் புகழப்பட்ட சிறப்பினையுடைய,
பொதியில் தென்றல் போலாது - பொதியின் மலையில் தோன்றும் தென்றல் தன்னை ஒவ்வா
வண்ணம், ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் - இந்த மதுரையின் தென்றலானது வந்தது
இதனைக் காண்பீர் ;
செந்நா - பொய் கூறா நா. நிவப்பு - உயர்வு ; சிறப்பு ;
சிறப்பினையுடைய மதுரைத் தென்றல் என்க. பொதியிற்கண் அமையாத மணம் பலவற்றையும் இத்
தென்றல் மதுரைக்கண் அளைந்து வருதலின் இதற்கு அப் பொதியிற் றென்றல் ஒவ்வாதாயிற்று.
ஆடி, பொருந்தி, அளைஇ, தோன்றித் தென்றல் வந்தது என்க. |
|