3. புறஞ்சேரியிறுத்த காதை

 

நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குந ரில்லென



133
உரை
134

     நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் - அதனால் அப் பாண்டியனது செல்வ மிக்க மதுரை மிகச் சேய்மையிலுள்ளதன்று ; தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என - மேலும் தனித்த நீர்மையிற் செல்லினும் வழிக்கண் தடுப்பார் ஒருவரும் இல்லை என்று சொல்ல ;

     தனி நீர்கழியினும் என்பதற்கு நீவிர் தனியே செல்லினும் என்றலும் பொருந்தும். தகைக்குநர் - தடுத்து நிறுத்தி ஆறலைப்பார்.