3. புறஞ்சேரியிறுத்த காதை

135

முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையு மல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த



135
உரை
139

     முன்னாள் முறைமையின் இருந் தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் - பெரிய தவத்தினையுடைய கவுந்தியடிகளுடனே முதனாளிற் சென்ற முறைமை போலப் பிற்றை ஞான்றும் இரவின்கண் சென்றனர், பெயர்ந் தாங்கு - செல்ல