3. புறஞ்சேரியிறுத்த காதை





140

அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலைமுரசக் கனைகுரல் ஓதையும்



137
உரை
140

     அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும் - பிறர்க்கு அரிய அழித்தற்றொழிலை வல்ல இறைவனது அகன்ற பெரிய கோயிலினிடத்தும், பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும் - பெரிய புகழ் வாய்ந்த பாண்டியனது மிக்க புகழ் அமைந்த கோயிலினிடத்தும், பால் கெழு சிறப்பின் பல்லியம் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் - பகுதிப்பட்ட சிறப்பினையுடைய காலை முரசமாகிய சிறந்த பல்லியத்தின் செறிந்த முழக்கொலியும் ;

     பெயர்ந்து - பெயரவெனத் திரிக்க. தெறற் கடவுள் - ஆலவாய் இறைவன். பெயர்ந்து என்பதனைப் பல்லியம் என்பதனோடு இயைத்துப் பல்லியம் பெயர்ந்து ஒலிக்கும் ஒலி எனப்பொருள் கொண்டு, பெயர்தல் - தாளமறுத எனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். காலைமுரசம் - பள்ளியெழுச்சி முரசம். காலை முரசப் பல்லிய வோதையும் என்க.