|
15
|
கொடுங்கோல்
வேந்தன் குடிகள் போலப்
படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
|
|
கொடுங்கோல்
வேந்தன் குடிகள் போல - கொடுங் கோன்மையையுடைய மன்னன் குடிகள் அம் மன்னன் ஒழியுங்
காலத்தைப் பார்த்திருத்தல் போல, படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு - ஞாயிறு
படுகின்ற செவ்வியைப் பார்த்திருந்த இவர் கட்கு ;
பார்த்திருந்தோர் - வினைப்பெயர் ; செங்கோல்
வேந்தன் வரவு பார்த்தலை உவமைக்கண்ணும், தண் கதிர் வரவு பார்த்தலைப் பொருளின்கண்ணும்
விரித்துரைக்க. |
|