புள்அணி
கழனியும் பொழிலும் பொருந்தி - பறவை கள் அழகு செய்யும் வயல்களும் சோலைகளும் பொருந்தப்
பெற்று, வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் - மிக்க நீரினையுடைய பண்ணைகளும்
பரந்த நீரினையுடைய ஏரிகளும், காய்க் குலைத் தெங்கும் வாழையும் கமுகும் - குலையாகப்
பொருந் திய காய்களையுடைய தெங்கும் கமுகும் வாழையும், வேய்த்திரள் பந்தரும் - திரண்ட
மூங்கிலால் இடப்பட்ட பந்தலும் ஆகிய இவை, விளங்கிய இருக்கை - விளங்கிய இருப்பினையுடைய,
அறம்புரி மாந்தர் அன்றிச் சேரா - அறத்தினையே விரும்பும் முனிவர்கள் அன்றிப் பிறர்
சேராத, புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்-மூதூரின் புறஞ்சேரிக்கண் விரும்பிப்
புக்கார் என்க.
பண்ணை - தோட்டமும், ஓடையும்.
காய்க்குலை என்பதனை வாழை, கமுகு என்பவற்றொடுங் கூட்டுக. இருக்கையினையுடைய புறஞ்சிறை
என்க. அறம்புரி மாந்தர் சேர்ந்த இருக்கையாகலான் இவர் புரிந்து புக்கார் என்க.
புறஞ்சேரி - இது கீழ்த்திசை வாயிற்கு அயலதோர் முனிவர் இருப்பிடம் என்பர் அடியார்க்கு
நல்லார்.
தொழுது போகி எய்திச் சூழ்போகிப்
புக்கனர் என்க. 'அறம் புரி மாந்த ரன்றிச் சேராப், புறஞ்சிறை மூதூர்' என்ற கருத்துப்
பின் 1அடைக்கலக் காதையுள் வருதலுங்
காண்க.
இது நிலைமண்டிலவாசிரியப்பா
புறஞ்சேரியிறுத்த காதை முற்றிற்று.
|