மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
கிணை நிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
148
உரை
148
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் - கிணைப் பறையையுடைய மள்ளர் மருத நிலத்து வைகறைக்கண் கொட்டும் ஒலியும் ஆகிய ;
கிணை - மருதப்பறை. பொருநர் - கூத்தருமாம். பாணி - பாட்டி னொலியுமாம். ;