3. புறஞ்சேரியிறுத்த காதை



150

கார்க்கட லொலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்



149
உரை
150

     கார்க்கடல் ஒலியில் கலி கெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - மகிழ்ச்சி மிக்க கூடற்கண் ஆர்க்கும் ஒலிகள் கரிய கடல் ஒலி போன்று மிக்கு ஒலித்து எதிர் கொள்ளுதலான் முன்னைத் துன்பங்களெல்லாம் நீங்கி ;
     எதிர்கொள - எதிரே வர ; எதிர்கொண்டழைப்பது போலாக. பல்வகை ஒலிகளைக் கேட்டலானும், பதியை யடைந்தோ மென்னும் மகிழ்ச்சியானும் அஞர் நீங்கினாரென்க.;