3. புறஞ்சேரியிறுத்த காதை

குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து



151
உரை
154

    குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் - குராவும் மகிழும் கோங்கும் வேங்கையும், மரவமும் நாகமும் திலகமும் மருதமும் - வெண்கடம்பும் சுரபுன்னையும் மஞ்சாடியும் மருதமரமும், சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - உச்சிச் செலுந்திலும் செருந்தியும் செண்பகமரமும், பாடலம் தன்னொடு பன் மலர் விரிந்து - ஆகிய இவை பாதிரியுடனே பல வகை மலர்களும் விரிந்து ;

    குரவமலர் முதலியனவும் பன்மலரும் விரிந்து என்க. சேடல் - உச்சிச் செலுந்தில் என்னும் மரமென்பர். ஓங்கல் - மரம் ; ஆகுபெயர்.