3. புறஞ்சேரியிறுத்த காதை


பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்


17
உரை
18

     பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பி - பலவகைப் பட்ட மீனாகிய சேனையொடு வெள்ளிய கதிர்களை விரித்து, தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றி - பாண்டியன் குலத்திற்கு முதல்வனாகிய திங்களஞ் செல்வன் தோன்ற;

     
தோன்றி - தோன்ற எனத் திரிக்க. மீன் தானை என்பதற்கு மீனக் கொடியையுடைய தானை யென்னும் பொருளும் தோன்றும்.