|
|
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
|
|
வாலுகம்
குவைஇய மலர்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பல்மலர் ஓங்கி எதிர் எதிர் விளங்கிய
கதிர் இள வன முலை - விரிந்த பொலிவினையுடைய ஆற்றிடைக் குறையின்கண் அடிப்பக்கம்
அகன்று பல மலர்களால் உயர்ச்சி பெற்று ஒன்றற்கொன்று ஒத்து விளங்கிய குவிதலையுடைய
மணற்குன்றாகிய விளக்கம் பொருந்திய இளைய அழகிய முலையினையும் ;
துருத்திக்கண் புடைக்கொண்டு ஓங்கி விளங்கிய வாலுக முலை என்க.
எதிர் - ஒப்பு ; மாறுபடலுமாம். பால்புடைக் கொள்ளலும் பன்மலரோங்கலும் எதிரெதிர்
விளங்கலும் முலைக்கும் பொருந்துமாறுணர்க. விலங்கிய எனப் பாடங்கொண்டு, ஒன்றையொன்று
நெருங்கிய வென்றுரைப்பர் அரும்பத வுரையாசிரியர். |
|