மூலம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
166
உரை
166
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் - குறுக்கே மறிந்தும் நெடுக ஓடியும் திரிகின்ற பெரிய கயல் ஆகிய நீண்ட கண்களையும் ;
விலங்கு நிமிர்தலும் ஒழுகலும் கண்ணுக்கும் பொருந்துமா றுணர்க. ;