|
|
தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
|
|
தையற்கு
உறுவது தான் அறிந்தனள் போல்-கண்ண கிக்கு மேல்வரும் துன்பத்தினைத் தான் முன்னரே அறிந்தாள்
போல, புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தூய்மையுடைய நறிய பூக்களாகிய ஆடையால் தன்
மெய்ம்முழுதும் போர்த்து, கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - தன்கண் நிறைந்த மிக்க
நீரினை மறைத்து உள்ளடக்க ;
புண்ணிய நறுமலர் - தன்னைக்கொண்டு அருச்சிப்பார்க்குப் புண்ணியங்களைக்
கொடுக்கும் நறிய பூ என்றுரைப்பாருமுளர்.
கண்ணிறை நெடுநீர் என்பதற்குத் தன்னிடத்து நிறைந்த நீர் எனவும் கண்களில் நிறைந்த
நீர் எனவும் பொருள் கொள்க. அடக்கி - அடக்க வெனத் திரிக்க. கரந்தனள் அடக்குதல்
இவர் நீர் மிகுதி கண்டு வெருவாதிருத்தற்பொருட்டென்க.
|
|