|
|
வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
|
|
வானவர்
உறையும் மதுரை வலங் கொள - தேவர்கள் உறையும் மதுரை நகரத்தினை வலங் கொண்டால், தான்
நனி பெரிதும் தகவு உடைத்து என்று - மிகவும் அறமுண்டாம் என்று கருதி, ஆங்கு அருமிளை உடுத்த
அகழி சூழ்போகி - அவ் விடத்தே, அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப்
போய் ;
நனி பெரிது, ஒருபொருட் பன்மொழி,
தான், அசை, மிளை - கட்டுவேலியுமாம். |
|