|
30
|
ஆரிடை யுழந்த
மாதரை நோக்கிக்
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத
|
|
ஆர்
இடை உழந்த மாதரை நோக்கி - கோவலன், வழி நடத்தலால் துன்பமுற்ற கண்ணகியை நோக்கி,
கொடுவரி மறுகும் - இந் நெறிக்கண் புலிகள் சுழன்று திரியும், குடிஞை கூப்பிடும் - பேராந்தை
குழறும், இடிதரும் உளியமும் - கரடியும் முழங்கும், இனையாது ஏகு என - இவற்றிற்கு நடுங்காது
செல்வாயாகவென்று கூறி ;
கொடுவரி - புலி ; வளைந்த வரிகளையுடையது. குடிஞை -
கோட்டான். மறுகும் - வாய்விடும் என்பாருமுளர். இடித்தல் - பற்பறை கொட்டலுமாம்.
|
|