|
35
|
தொடிவளைச்
செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து
|
|
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி - வளைந்த வளையலை அணிந்த கண்ணகியின் சிவந்த
கையினைத் தன் தோளின்மீது சார்த்தி, மற உரை நீத்த மாசு அறு கேள்வி-பாவ மொழிகளின்
நீங்கிய குற்றமற்ற கேள்வியினையுடைய கவுந்தியடிகளின், அறவுரை கேட்டு ஆங்கு ஆர்இடை கழிந்து-அறவுரைகளைக்
கேட்டு அதனாலே கடத்தற் கரிய வழியைக் கடந்து ;
தொடி
- வளைவு. தோளிற் காட்டி - தோளிலே தோன்றச் செய்து. கேள்வி - கேள்வியை உடைய கவுந்தியடிகள்
; ஆகு பெயர். ஆங்கு - அவ்வாறு ; அசையுமாம். |
|