|
|
புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப்
பண்ணையும்
இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப்
|
|
புறஞ்சிறைப்
பொழிலும் - அங்ஙனம் புக்க புறஞ்சேரியிடத்துள்ள சோலையின்கண்ணும், பிறங்கு நீர்ப்
பண்ணையும் - விளங்குகின்ற நீர் பொருந்திய பண்ணைகளிடத்தும், இறங்கு கதிர்க் கழனியும்
- வளைந்த கதிர்களையுடைய வயல்களிலும், புள் எழுந்து ஆர்ப்ப - பறவைகள் துயிலெழுந்து ஒலி
செய்ய ; பண்ணை - ஓடையும் தோட்டமும். இறங்குதல் - வளைதல் ; தாழ்தல் எனலும் பொருந்தும்.
பிறங்கல் - மிகுதலுமாம். 1"புள்ளணி
கழனியும்.....வெள்ளநீர்ப் பண்ணையும்" என்றார் முன்னும். |
1.
சிலப். 13: 191-2.
|
|