|
5 |
புலரி வைகறைப் பொய்கைத் தாமரை
மலர்பொதி யவிழ்த்த வுலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன்
ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
|
|
புலரி
வைகறை - புலர்கின்றதாகிய வைகறைப் பொழுதின்கண், பொய்கைத் தாமரை மலர் பொதி அவிழ்த்த
உலகு தொழு மண்டிலம் - குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார்
யாவரும் வணங்கும் ஞாயிறு, வேந்து தலை பனிப்ப - பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம்,
ஏந்து வாட் செழியன் - வாளினை ஏந்திய பாண்டியனது, ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப
- வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப
;
பொதில் - குவிதல். ஓங்கு உயர் -
ஒரு பொருட் பன்மொழியுமாம். கூடல் ஊர் - கூடலாகிய ஊர் ; ஆகு பெயர். எடுப்ப - எழுப்ப.
1'ஊர் துயில் எடுப்ப' என்றார்
பிறரும். ஆர்ப்ப அவிழ்த்த மண்டிலம் ஊர் துயில் எடுப்ப வென்க. |
1.
மணி. 7: 125
|
|