|
25
|
கவுந்தி கூறுங் காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துய ருழந்தோய
|
|
கவுந்தி
கூறும் : கவுந்தியடிகள் கூறுவார் : காதலி தன்னொடு தவந் தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்
- காதலை யுடைய மனைவியோடு அறவினை ஒழிந்த பக்கத்தானே தனித்துத் துயரினை உழந்தோய்
;
தீர்தல் - ஒழிதல். 1"தவந்தீர்
மருங்கிற் றனித்துய ருழந்தேன்" என்றார் பிறரும். தவந்தீர் மருங்கில் என்றது முன்பு
நல்வினை செய்த நீ சிறிது தீவினையும் செய்தமையானே என்றபடி. தனித் துயர் - ஒப்பற்ற
துயருமாம். உழத்தல் - நுகர்தல். |
1
மணி, 14 : 89.
|
|