4. ஊர்காண் காதை

ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்


33
உரை
34

       ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை - போக்கவொண்ணாத தீவினையின் பயனாகிய துன்பத்தினை நுகருங்காலத்து, கை யாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் - அறநூல்களைக் கற்றுணர்ந்த அறிஞர் செயலறவினைக் கொள்ளார் ;

      ஒய்யாமை - போக்கவொண்ணாமை. தாமே முன் செய்து கொண்டமையானும் ஊட்டாது கழியாமையானும் இயைந்து நுகர்தற்பால தெனக் கொள்ளுவரென்றதாம். இனி, முன்னர் 'வல்வினை யூட்டும்' எனக் கூறியதனை மேற்கோள் காட்டி வலியுறுத்துகின்றார்.