|
|
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையா நெடுமொழி யன்றோ
|
|
ஆதலின்
- ஆகையான், தாதை ஏவலின் - தந்தையின் ஏவலால், மாதுடன் போகி - தன் மனைவியோடும்
கானம் சென்று, காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் - அம் மனைவி பிரிதலானே மிக்க
துயரத்தினை நுகர்ந்தோன், வேத முதல்வற் பயந்தோன் என்பது - வேதத்தை அருளிய நான்முகனைப்
பெற்ற திருமால் என்பதனை, நீ அறிந்திலையோ - நீ அறியாயோ, நெடு மொழி அன்றோ -
அது யாவரும் அறியும் வண்ணம் பரந்து பட்ட சொல்லன்றோ ;
தாதை - தயரதன். 'நீ அறிந்திலையோ'
என்றது அறிந்து வைத்தும் இரங்குதல் அறிவுடைமையாகாது என்பதாம்.
|
|